Wednesday, December 14, 2016

சிவன் மந்திர உச்சாடணங்கள்

சிவன் மந்திர உச்சாடணங்கள்
மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.
அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்தமந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில்தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம்.
குரு மூலம் மந்திர உபதேசம் பெறுவதே மிகச்சிறந்தது. ஏன்  என்றால் குருவே நமது தவறுகளை திருத்தி அருள்புரிபவர். நமது இந்து மதம் குரு சிஷ்ய பரம்பரையை கொண்டது. குருவே அனைத்திலும் உயர்ந்தவர். குருவே தெய்வம். குருவே கடவுள்.
இனி மந்திரங்களை பார்ப்போம்.
தத்புருஷ மந்திரம்
இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.
1. "நமசிவயம் லங்க நமசிவய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
2. "அலங்கே நமசிவய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
3. "அங் சிவய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
4. "ஊங்கிறியும் நமசிவய நம" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
5. "ஓம் நமசிவய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.
அகோர மந்திரம்
இதன் மூல மந்திரம் "நமசிவ",
"சங் கங் சிவயநம" என உச்சரிக்கஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவய நம" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவய நம" என உச்சரிக்கவானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவய" என உச்சரிக்க மழை உண்டாகும்
வாமதேவ மந்திரம்
"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.
சத்யோசாத மந்திரங்கள்
"சிவய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்.
ஈசான மந்திரங்கள்
"சிமிறியும் ஊங்சிவய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்

No comments:

Post a Comment